Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

+1, +2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் – முதல்வர் அறிவிப்பு …!!

11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமென்று முதல்வர் தெரிவித்தார்.

கொரோனா  வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம். தேர்வு எழுத வேண்டாம் , அவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவித்தது. 

இந்நிலையில் தமிழகத்திலும் கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் படிக்கும் எட்டாம் வகுப்பு வரை தேர்வு இல்லாமல் தேர்ச்சி வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை பெற்றோர்கள், ஆசிரியர்கள் சார்பாக முன்வைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி வழங்க  உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

இது தொடர்பாக பதிலளித்து பேசிய தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் ,  11, 12ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தார். அதில் 27 .3.2020 முதல் 13.4.2020 வரை நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படும். தமிழ்புத்தாண்டு தினத்திற்கு பிறகு தொடங்கும் என்றும் , 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள்  திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பேரவையில் தெரிவித்தார்.

Categories

Tech |