Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : +1 , +2 தேர்வுகளை தாமதமாக தொடங்குங்க- நீதிமன்றம் உத்தரவு ..!!

11 ,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போதுமான அளவில் முகக் கவசங்கள் , சனிடைசர் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது , பொது தேர்வு நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று கடந்த வாரம் கேட்ட கேள்விக்கான விளக்கம் அரசின் சார்பில் இன்று அறிக்கையாக  அளிக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசு வழக்கறிஞ்சர் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேற்று ஒத்தி வைக்கப்பட்டதாகவும்,  11ஆம் வகுப்பு தேர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இன்று  கூட தேர்வு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை வரை தேர்வு நடைபெறுவதாக தெரிவித்தார். அப்போது +1 , +2 தேர்வை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

10 மணிக்கு தொடங்கும் தேர்வை 10.30 மணிக்கு  தொடங்கி 1 30 வரை நடத்த வேண்டும் என்றும், தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து சேவையை ஏற்படுத்தித் தர வேண்டும். இதை உடனடியாக பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அரசுத் தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |