பிரிட்டனை சேர்ந்த கிரஹாம் அஸ்கி என்ற 58 வயதான நபர் ஒருவர் blog ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் உலகின் மிகவும் மோசமான கழிவறையை கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன் தனது பயணத்தை தொடங்கினார். மோசமான கழிவறையை கண்டுபிடித்தது தான் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருப்பதாகவும் அதற்காக 91 நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அதாவது மலைப்பிரதேசங்கள் மற்றும் கிராமங்கள் என இவருடைய நெடும் பயணம் தொடர்ந்து உள்ளது .
இறுதியாக உலகின் மிகவும் மோசமான கழிவறையையும் அவர் கண்டுபிடித்தார். அதன்படி தகிஸ்தானின் அய்னி பகுதியில் பமிர்சின் மேற்கு விளிம்பில் உலகின் மோசமான கழிவறை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த மோசமான கழிவறையை கண்டுபிடிப்பதற்காக அந்த நபர் 1.3 கோடி செலவழித்துள்ளார்.இந்த மோசமான கழிவறையை தேடும் படலத்தில் தனக்கு கிடைத்து அனுபவங்களை கொண்டு இவர் புத்தகம் ஒன்றையும் எழுதி உள்ளார். அந்த புத்தகத்திற்கு என்று பெயரிடப்பட்டுள்ளது.