Categories
இந்திய சினிமா சினிமா

1.3 மில்லியன் லைக்குகள்… ரன்வீர் சிங் பதிவிட்ட புகைப்படம்…. யார் போன்று இருப்பதாக நினைக்கிறீர்கள்…?

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை யார் போன்று இருப்பதாக நினைக்கிறீர்கள் என கேட்டு பதிவிட்டுள்ளார்.

 

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் திரை உலகத்தின் சில நடிகை நடிகர்கள் அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது தொடர்ந்து வருகிறது.இதில் தற்போது பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகையான தீபிகா படுகோன் தனது கணவரான நடிகர் ரன்வீர் சிங்கிற்கு சிகை அலங்காரம் செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை ரன்வீர்சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைத்து ஹேர் ஸ்டைல் டன் பை தீபிகா படுகோன், இந்த ஹேர் ஸ்டைல் ஜப்பான் சாமுராய் திரைப்படமான யோஜிம்போவில் வரும்  ஹீரோவான  தோஷிரோ மிஃபூனின் ஹேர் ஸ்டைல் போலவே உள்ளது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.ரன்வீர் சிங் பதிவிட்ட இந்த புகைப்படம் சில மணி நேரங்களிலேயே 1.3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை  பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |