1 3/4 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கலையரசி தனது வீட்டை பூட்டி விட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் இருந்த 1 3/4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து கலையரசி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் வந்து சென்றுள்ளாரா என ஆய்வு செய்து வருகின்றனர்.