தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. புதிய மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் இன்று முதல் புதிய மின் கட்டணம் அமலுக்கு வருவதாக அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் ஆண்டுதோறும் ஆறு விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்டு தோறும் ஜூலை 1ஆம் தேதி மின் கட்டணம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
இந்த உயர்வு அனுமதி கேட்டு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கொடுத்துள்ள பெட்டிஷனில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு 1.45 லட்சம் கோடி கடன் இருக்கு. இதனை திருப்பி தருவதற்கு உண்டான சாத்தியக்கூறு இல்லை. இப்போதைக்கு எங்கேயுமே கடனும் வாங்க முடியவில்லை. எனவே 6% எங்களுக்கு கூட்டினால் மட்டும்தான் எங்களால் கடனை திருப்பி செலுத்த முடியும் என்று சொல்லி கேட்டததற்காக மின்கட்டண உயர்வுக்கு அப்ரூவல் கொடுத்திருக்கிறார்கள்.
இதற்கு முன்னாள் இருந்த அதிமுக அரசாங்கம் எட்டு வருடமாக மின்கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தது. தற்போது இனி ஆண்டுக்கு ஒவ்வொரு முறையும் மின்கட்டணம் உயரும் என்பதால் இதன் சுமை ரொம்ப பெரிதாக தெரிகிறது. தமிழக மின்சார வாரியம் ஆண்டுதோறும் 12 ஆயிரம் கோடி நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. வருமானமே உயராமல் இருக்கின்றது.
எல்லா விதமான செலவினங்களும் கூடியிருக்கிறது, மாத சம்பளம் கொடுப்பது உயர்ந்திருப்பது, 85 ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாடு மின்சார கழகத்தின் வாரியத்தில் அவர்கள் எல்லோருக்கும் ஊதியம் கூட்டி இருந்தார்கள். நிலக்கரியோட விலையும் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது, மெயின்டனன்ஸ் சார்ஜ் உயர்ந்திருக்கிறது, நிலக்கரிகளை எடுத்துட்டு வர டிரான்ஸ்போர்ட் விலை உயர்ந்துள்ளது, எல்லா பக்கமும் செலவு அதிகரித்துள்ளதால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் எனவும், எனவே தான் ஆண்டுக்கு ஒருமுறை இனிமேல் 6% மின் கட்டணம் உயர்த்தப்படும் எனவும் சொல்லப்படுகின்றது.