நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
செங்கோட்டை பகுதியில் உள்ள மெய்யப்பன் என்பவர் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவர் 20 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கிய யமஹா ஆர்15 இருசக்கர வாகனத்தை நேற்று இரவு கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு கடைக்குள் தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்துள்ளது.
இதனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை வேதாரண்யம் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் வந்த 2 பேர் மெய்யப்பனின் இருசக்கர வாகனத்தை உடைத்து திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. சிசிடிவி காட்சிகளில் உள்ள திருடர்களின் உருவத்தை வைத்து வேதாரணியம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.