Categories
தேசிய செய்திகள்

1 – 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. ஒரு வாரம் அரை நாள் மட்டுமே பள்ளி… மாநில அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகள் குறித்து ஒரு சில மாநிலங்கள் மட்டுமே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கர்நாடகாவில் 20 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகள் என்று திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கு வரும் குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பள்ளிகளில் 50% குழந்தைகளை மட்டும் அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முதல் ஒரு வாரம் அரை நாள் மட்டுமே பள்ளியை நடத்த வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |