1.5 கோடி முகக் கவசங்கள் (MASK) ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பணிகளை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 பேர் குணமடைந்துள்ளனர், கொரோனா அறிகுறியுடன் 1,925 தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். மாவட்ட வாரியாக நிலைமையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இதில் கொரோனா அறிகுறியுள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் வர வேண்டியிருக்கிறது.
11 லட்சம் பாதுகாப்பு கவசங்களும், 1.5 கோடி முகக் கவசங்கள் (MASK) ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் 17,089 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் 3,018 வெண்டிலேட்டர் தயார் நிலையில் உள்ளன. வீட்டு வாடகைதாரர்களின் பிரச்னை பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.