அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு இரண்டாம் தடவையாக லாட்டரியில் 1.5 கோடி ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது.
நம் ஊர்களில் அதிர்ஷ்டம் ஒரு தடவை தான் கதவை தட்டும், அப்போதே அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பழமொழி உண்டு. ஆனால், வெளிநாடுகளில் அப்படி இல்லை போலும். அமெரிக்க நாட்டின் தெற்கு கரோலினா மாகாணத்தில் இருக்கும் கொலம்பியா நகரத்தில் ஒரு பெண் லாட்டரி சீட்டு வாங்கியிருக்கிறார். அதில் அந்த பெண்ணிற்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசு விழுந்திருக்கிறது. நம் நாட்டு மதிப்பில் ஒன்றரை கோடி ரூபாய்.
அந்த பெண்ணிற்கு இரண்டாம் முறையாக இந்த பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு கடந்த 2020 ஆம் வருடத்தில் அதே கடையில் வாங்கிய ஒரு லாட்டரி சீட்டு மூலம் அவருக்கு 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் கிடைத்தது, இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, முதல் தடவையாக பரிசு விழுந்த போது அதனை வைத்துக்கொண்டு என் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்வுடன் அனுபவித்தேன். ஆனால் தற்போது அதை வைத்து ஒரு வீடு வாங்கவுள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.