Categories
உலக செய்திகள்

“1.50 கோடி” வீடியோக்களுக்கு தடை… யூடியூப் நிறுவனம் அதிரடி .. இதுதான் காரணம்..!!

யூடியுப் தளத்தில் தவறான செய்திகள் பரப்பப்படுவதால் 1.50 கோடி வீடியோக்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

நமக்கு தேவையான தகவல்களை வீடியோ காட்சிகள் மூலமாக திரையிட்டு காண்பிக்க யூடியூப் தளம் பெரிதும் உதவி வருகிறது. இந்நிலையில் இந்த யூடியூப் தளத்தில் தேவையில்லாத வன்முறையை தூண்டும் விதத்தில் பல வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. சென்ற ஜனவரி மாதம் இந்த புகாரின் அடிப்படையில் 50 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது இந்த வன்முறைகள் அதிகரித்ததன் காரணமாக 1.50 கோடி வீடியோக்கள் யூடியுப் தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் எதனால் நீக்கம் செய்யப்பட்டது என யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையில், பாலியல் வன்கொடுமைகள், இணைய அச்சுறுத்தல், வன்முறை, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கவலைகள், சமூக மோசடிகள், தீவிரவாதிகள் இவை போன்ற பல்வேறு காரணங்களுக்காக 1.50 கோடி வீடியோக்கள் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

Categories

Tech |