Categories
தேசிய செய்திகள்

மக்களே!! எச்சரிக்கையாக இருங்க… ஒரு பீர்ஆர்டர் பண்ண போய்… 1.50 லட்சம் பறிபோன சம்பவம்…!!

ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்த நபர் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்து 1.50 லட்சம் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக மக்கள் வீட்டிலேயே இருந்து வருகின்றன. இதன் காரணமாக தங்களுக்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கி கொண்டு உள்ளனர். இதேபோன்று புனேவை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவர் ஆன்லைனில் பீர் ஒன்றை ஆர்டர் செய்ய தேடியுள்ளார். தேடிக் கொண்டிருந்தபோது ஒரு எண்ணை அந்த நபர் கண்டுபிடித்தார். அதனை தொடர்பு கொண்டு பேசியபோது முதலில் பத்து ரூபாயை அனுப்பும்படி கேட்டு உள்ளனர். பின்னர் ஒரு லிங்கை அனுப்பி அதை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். அந்த நபரும் அதை பதிவிறக்கம் செய்து கொண்டார்.

இதையடுத்து அந்த நபரின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டு அவரின் வங்கி கணக்கில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பதறிப்போய் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபோன்ற மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறிய காவல்துறையினர் அந்த வங்கிக் கணக்கிற்கு மேலும் பணம் செல்லாமல் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். பின்னர் மோசடி செயலில் ஈடுபட்ட நபரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |