திருவாரூர் மாவட்டம் விளமல் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1072 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 98 லட்சத்து 56 ஆயிரத்து 290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகிக்க திருவாரூர் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உளவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, தமிழக மக்களின் நலன் காக்கும் திட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கான தமிழக அரசு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு விளங்கி வருகின்றது. மேலும் இன்றைய தினம் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என கூறியுள்ளார்.
இந்நிலையில் திறந்தவெளியில் அடுக்கி வைத்திருந்த 1.70 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என அறிவித்துள்ளார். வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லவதற்கு 4 ரயில்வே வேகன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 இடங்களில் நெல் அரவை ஆலைகள் அமைய இருக்கின்ற நிலையில் நாகைக்கு முன்னுரிமை தரப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.