Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்வு – 4,901 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 193 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை இல்லாத அளவு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 86,984ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,164 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 89,995 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 28,081 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,197 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |