Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதுதான் முதல் முறை… லட்சக்கணக்கில் வழங்கப்பட்ட நஷ்ட ஈடு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சாலை விபத்தில் உயிரிழந்த சாப்ட்வேர் பொறியாளர் குடும்பத்திற்கு 1 கோடியே 98 ½ லட்சம் ரூபாய் நஷ் ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஆவார். இவருக்கு அபிநயா என்ற மகளும், ஆனந்த கிருஷ்ணன் என்ற மருமகனும் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் பொறியாளராக வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 2018 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 16 ஆம் தேதியன்று முருகனும் ஆனந்த கிருஷ்ணனும் மோட்டார் சைக்கிளில் நாகை மாவட்டத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது கானூர் பகுதி அருகே எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

இதனை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மகிளா கோர்ட்டில் முருகனின் மனைவியான சுமதி என்பவரும், ஆனந்த கிருஷ்ணனின் மனைவியான அபிநயா ஆகிய இருவரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதியான பன்னீர்செல்வம் சாலை விபத்தில் இறந்த  இருவரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க கோட்டா அரசு போக்குவரத்து நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து முருகன் குடும்பத்திற்கு 7 லட்சத்து 60 ஆயிரத்து 240 ரூபாய் மற்றும் அனந்த கிருஷ்ணனின் குடும்பத்திற்கு குடும்பத்திற்கு 1 கோடியே 90 லட்சத்து 92 ஆயிரத்து 693 ரூபாய் நஷ்டஈடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வாறாக 1 கோடியே 98½ லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு பிறப்பித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது முதல் முறையாகும்.

Categories

Tech |