செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது வாரிசு அரசியல் என சமூக வலைதளத்தில் யார் சொல்கிறார்கள் ? சொல்லக்கூடிய நபர்கள் யார் ? பிஜேபி எடுத்துக் கொள்ளுங்கள்…. ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கக்கூடியவங்க… நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடியவர்களின் வாரிசுகள் அரசியலில் இருக்காங்க.
ஒன்றியத்தில் அமைச்சராக இருக்கக்கூடியவர்களுடைய வாரிசுகள் அரசியல் இருக்கிறார்கள். அதேபோல இங்க இருக்க கூடிய அதிமுகவை எடுத்துக்கோங்க. சில நேரங்களில் விமர்சனம் முன்வைக்கிற ஜெயக்குமார் உடைய மகன் நாடாளுமன்ற உறுப்பினரா ?
இருந்தாரா இல்லையா ? இல்லையா… ஓபிஎஸ் மகன் நாடாளுமன்ற உறுப்பினரா ? இல்லையா.. இயக்கத்தினுடைய வெற்றிக்கு குறிப்பா… லட்சோப லட்சம் இளைஞர்கள் இளைஞரணி வழிநடத்தக்கூடிய…. இளைஞர்களை ஈர்க்கக்கூடிய தேர்தல் களத்தில் இயக்கத்தின் வெற்றிக்கு உறுதுணையாக மிகப்பெரிய மக்கள் செல்வாக்கை பெற்று, உழைத்து…
அந்த உழைப்பால் மக்கள் அங்கீகாரத்தை கொடுத்து, இன்று அமைச்சராக கழக தலைவர்கள் அவர்களால், பொறுப்பேற்று கொண்டு இருக்கின்றார். இன்னும் அசுர வளர்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தயாராகிக் கொண்டிருப்பதை மனதிலே வைத்திருக்கக் கூடியவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இதுபோன்ற கருத்துக்களை முன்வைக்கலாம் என தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றத்தை அடுத்து ஒட்டுமொத்த தமிழக மக்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரு கோடி தொண்டர்களும், லட்சோப லட்சம் இளைஞர்களும் மகிழ்ச்சி கடலில்… மிகப்பெரிய உற்சாகத்திலே ஈடுபட்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.