சிறு மற்றும் குறு தொழில் துறையினருக்கு 59 நிமிடங்களுக்குள் கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்களால் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் வேலைவாய்ப்பினை இழந்ததாக தொடர் குற்றசாட்டு பரவி வந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக தொழில் செய்ய முனைவோருக்கு 5 கோடி ரூபாய் வரையிலான கடன் வழங்க ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் தயாராக உள்ளன.
இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு கோடி ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தை வங்கிகளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். வாகன கடன், வீட்டுக் கடன் போன்றவற்றையும் இத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் பொதுத்துறை வங்கிகள் விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வங்கிகளில் வர்த்தகம் உயர்வதுடன், கடனுக்கான உத்தரவாதமாக வாகனமோ, வீடோ அடமானம் வைக்கப் பட்டிருக்கும்.