நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாடிய நிகழ்ச்சியில், ஆட்டுக்கறி எவ்வளவு தம்பி ? ஒரு கிலோ 800 ரூபாய் இல்லை 1000 ரூபாய் தம்பி. கறி வாங்க போறது இல்ல என்பதால் உங்களுக்கு தெரியல என நினைக்கிறேன். 1000 ரூபாய்.. நீங்க ஏன் ஆடு வளர்க்கவில்லை. நாட்டு கோழி கறி 1 கிலோ 650 ரூபாய், நீங்க ஏன் வளர்க்கவில்லை ?
கொரோனா நேரத்துல எல்லா கடையும் மூடி இருந்தது. ஆனால் அத்தியாவசிய பொருள் கடை மட்டும் திறந்திருந்தது. அரிசி- பருப்பு கடை, காய்கறி கடை தான் அத்தியாவசிய பொருட்களின் கடை. நீ செல்போன் இல்லாமல் வாழ முடியும். கார் இல்லாம வள முடியும். டிவி இல்லாம வாழ முடியும். எது இல்லாமலும் உன்னால் வாழ முடியும். நீரும் – சோறும் இல்லாமல் வாழ முடியாது. நீ ஏன் பொருளாதாரத்தை அங்கே நகர்த்தவில்லை. ஏன் நகர்த்தவில்லை ?
ஒரு 5 வருடம் ஆட்சியை அண்ணனிடம் கொடுத்துவிட்டு கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நான் என்ன செய்றேன்ன்னு மட்டும் பாருங்க. மாற்றம் என்பது ஒரே ஒரு மாற்றம் தான். திமுக கொடியில் அண்ணா இருக்க மாட்டார். அதிமுக கொடியில் அண்ணா இருப்பார், இது ஒன்றுதான் மாற்றம். இங்கேயும் ஊழல், அங்கேயும் ஊழல், இங்கேயும் லஞ்சம், அங்கேயும் லஞ்சம், இங்கேயும் பஞ்சம், அங்கேயும் பஞ்சம், இங்கேயும் பசி, அங்கேயும் பசி, அங்கேயும் திருட்டு, இங்கேயும் திருட்டு, இங்கேயும் இருட்டு, அங்கேயும் இருட்டு அதே தான் நடக்கும்.
ஒரு கொள்கை மாற்றமே கிடையாது. அதே தான் சொல்கிறேன்… திமுகவுக்கும், அதிமுகவுக்கும் என்ன வேறுபாடு என்றால் ? அடிக்கடி பாராட்டு விழா நடந்தால் அது திமுக ஆட்சி. அடிக்கடி பதவி ஏற்பு விழா நடந்தால் அது அதிமுக ஆட்சி என தெரிவித்தார்.