Categories
உலக செய்திகள்

“16 கோடி நன்கொடை” தாராளமாக கொடுத்த தம்பதியினர்…. எதற்காக தெரியுமா…?

கனேடிய தம்பதியினர் நாட்டின் வன பாதுகாப்பிற்காக  $1 மில்லியன் பணத்தினை நன்கொடையாக வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nature Conservancy of Canada என்ற கனடா நாட்டின் மிக முக்கிய நிலங்கள், நீர் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க உதவும் இலாப நோக்கமற்ற அமைப்பிற்கு $1 மில்லியன் பணத்தினை மேற்கு வான்கூவரையில் வசித்து வரும் ஆல் கோலிங்ஸ்-ஹிலாரி  ஸ்டீவன்ஸ் என்ற தம்பதியினர் வழங்கியுள்ளனர். இது இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 16 கோடி ரூபாய் ஆகும். இந்த பணம் பிரிட்டீஷ் கொலம்பியா முழுவதிலும் உள்ள சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த தனியார் நிலங்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும். மேலும் வேறு யாராவது வந்து நிலத்தினை மேம்படுத்துவதற்கு முன் அவற்றை பாதுகாப்பதற்கும் இந்த பணம் பயன்படுத்தப்படும்.

இதுதொடர்பாக தம்பதியினர் கூறியபோது “சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், குறிப்பாக காலநிலை மாற்றம் குறித்த தற்போதைய தேவைகளின் போதும் கனடாவுக்கு குறைவான நிதியை கிடைக்கிறது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. இதில் எங்களுடைய எண்ணம் என்னவென்றால் நாங்கள் கொடுக்கும் நன்கொடையை பார்த்து மற்றவர்களும் அது போல முன்வரவேண்டும். மேலும் எங்களுடைய பணம் சுற்றுசூழல், இயற்கை, வனப்பகுதி நிலங்கள் போன்றவைகள் பாதுகாக்க பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து Nature Conservancy of Canadaன் பிரிட்டீஸ் கொலம்பியா மண்டல தலைவர் நான்சி நியுஹவுஸ் கூறியபோது “ஆல் கோலிங்ஸ்-ஹிலாரி  ஸ்டீவன்ஸ் தம்பதியினரின் இந்த பங்களிப்பை நான் அன்புடன் வரவேற்கிறேன். இவ்வாறு நிலப் பாதுகாப்பிற்காக இந்த நெகிழ்வான நிதியை கொடுத்ததன் மூலம் அவர்கள் நம்பிக்கையையும், தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். இந்த தம்பதியினரின் இந்த தாராளமான மனப்பான்மை கனடா மற்றும் உலகில் உள்ள மக்களுக்கும் , எதிர்கால சந்ததியினருக்கும் பயனளிக்கும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |