Categories
தேசிய செய்திகள்

1 லட்சம் டெபாசிட்டுக்கு ரூ. 40,000 வட்டி… தபால் துறையில் அசத்தலான திட்டம்… உடனே போங்க…!!!

தபால் நிலையங்களில் பொதுமக்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்றுதான் டைம் டெபாசிட் திட்டம். அதாவது நேர வைப்பு திட்டம்.

இந்த திட்டம் மூலம் முதலீடு செய்தால் சில ஆண்டுகளில் உங்களுக்கு முதலீட்டில் இரட்டிப்பு ஆகலாம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை விட இந்த சேமிப்பு திட்டத்தில் தான் வட்டி அதிகமாக கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு ஆண்டு, இரண்டு, மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு என முதலீடு செய்துகொள்ளலாம். மூன்று ஆண்டுகளுக்கு 5.5 சதவீத வட்டியும், ஐந்து ஆண்டுகளுக்கு 6.7 சதவீத வட்டியும் கிடைக்கும்.

உதாரணமாக நீங்கள் ஒரு லட்சத்தினை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு மொத்தம் 39,406 வட்டியாக கிடைக்கும். வருட வருமானம் கிடைக்கும் வட்டித் தொகையை வேறு திட்டத்திலும் நீங்கள் முதலீடு செய்துகொள்ளலாம். இந்த திட்டம் மூலம் செக்ஷன் 80c வருமான வரி சட்டம் 1961 மூலம் ஆதாயம் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் ஆயிரம் முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ள முடியும்.

Categories

Tech |