அமெரிக்காவில் ஒரு பிரபல நிறுவனம், தனியாளாக ஒரு அறையில் அமர்ந்து 13 பேய் படங்களை பார்த்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை என்று அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் பிரபல பைனான்ஸ் பஸ் நிறுவனமானது, Horror Movie Heart Rate Analyst என்ற பெயரில் ஒரு போட்டி அறிவித்திருக்கிறது. அதாவது தற்போது வரை, அங்கு வெளியான பதிமூன்று பேய் படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அந்த படங்கள் அனைத்தையும், போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் இருட்டான ஒரு அறையில் தனியாளாக 10 மணி நேரங்கள் தொடர்ந்து பார்த்து முடிக்க வேண்டும்.
இந்த போட்டி 10 தினங்களுக்கு நடைபெறுகிறது. போட்டியாளர்களின் இதய துடிப்பை கண்காணிப்பதற்காக, அவர்களின் உடலில் Fit bit இயந்திரம் பொருத்தப்படும். எனினும், இப்போட்டியில் பங்கேற்கும் நபர்கள், நிச்சயம் அமெரிக்க மக்களாக தான் இருக்க வேண்டும். மேலும் 18 வயதுக்கு அதிகமான நபர்கள் தான் இதில் கலந்து கொள்ள முடியும். இந்த படங்கள் முழுவதையும் பார்த்து முடித்துவிட்டு வெளியில் வருபவர்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படவுள்ளது.