Categories
அரசியல்

BREAKING : 30 நிமிடங்களில் பரிசோதனை… 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் விரைவில் வாங்கப்படும்… முதல்வர் பழனிசாமி!

30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்ட உள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் குறைவு தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமானநிலையத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றார்.

மேலும் தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. 3371 வெண்டிலட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 38 மையங்கள் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்ட உள்ளன. ரேபிட் டெஸ்ட் கருவி வந்தவுடன் கொரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |