விருதுநகர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் முழு ஊரடங்கின் போதும் மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் தலைமை காவலர் ராமதாஸ் ஆகியோர் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து செவல்பட்டி பகுதியில் உள்ள கொட்டமடக்கிபட்டி கிராமத்தில் மாட்டுத் தொழுவத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெரியசாமி(38) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 630 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.