Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடரும் நிதி நெருக்கடி…. பெட்ரோல் ஒரு லிட்டர் 338 ரூபாய்…. அதிர்ச்சியில் மக்கள்…!!!

நிதி நெருக்கடியால் இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 338 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

இலங்கையில் நிதி நெருக்கடி ஒவ்வொரு நாளும் கடுமையாக மோசமடைந்து வருகிறது. எரிபொருள் தட்டுப்பாடு, ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மின்தடை, தொழிற்சாலைகள் அடைப்பு, பணியாளர்கள் பணி நிறுத்தம் என்று இயல்பு நிலை கடுமையாக  பாதிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, மக்கள் தொடர்ந்து அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 84 ரூபாய் அதிகரித்து 338 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது மக்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இதேபோன்று ஒரு லிட்டர் டீசல் 113 ரூபாய் உயர்ந்து 289 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Categories

Tech |