Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

1 மாதம் ஆகிட்டு…. ரொம்ப கஷ்டப்படுறோம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டவுன் அபாய்தெருவில் வசித்துவரும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நகராட்சி சார்பில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. ஆனால் தற்போது 1 மாதம் ஆகியும் குடிநீர் வழங்காததால் மக்கள் பலமுறை நகராட்சி அலுவலகம், கலெக்டர், எம்.எல்.ஏ, போன்றவர்களிடம் மனு கொடுத்திருக்கின்றனர். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் ஊர்வலம் சென்று அலுவலகம் முன்பு தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். அங்கு நகராட்சி அதிகாரிகள் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும், கழிவுநீர் கலப்பதை சரி செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |