முதலமைச்சரை கொலை செய்தார் 10 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்ற சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் புதிதாக கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக சுவரொட்டி ஒன்று அமைந்துள்ளது.
அதில் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் அவர்களை கொலை செய்தால் 10 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. சுவரொட்டி தயார் செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வரும் நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை திசை திருப்பவே இத்தகைய செயல் அரங்கேறி இருக்கலாம் என்றும் கருத்துக்கள் பரவுகிறது.