அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திரு ஸ்டாலின் பேசுகிறார், நாங்கள் வந்து நிறைய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி விட்டோம் என்று…. நீங்கள் எங்கு செயல்படுத்தினீர்கள், அண்ணா திமுக அரசாங்கம் அம்மா இருக்கும்போது போடப்பட்ட திட்டங்கள், நான் முதலமைச்சராக இருக்கும்போது அம்மா அரசு போட்ட திட்டம், நீங்கள் அதற்கு ரிப்பன் கட் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதையாவது ஒழுங்காக திறங்கள்.
எல்லா பாலமும் நம்முடைய அரசு கொண்டு வந்த திட்டங்கள், அதைத்தான் திறந்து வைக்கிறார். நாம் கொண்டு வந்த மருத்துவக் கல்லூரியை திறக்கிறார். வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி, பிரம்மாண்டமான சட்ட கல்லூரி 125 கோடியில் உங்கள் பகுதிக்கு கொடுத்திருக்கிறேன், நான் கஷ்டப்பட்டு கொண்டு வந்து நிதி ஒதுக்கி கட்டி வைத்தால், இவர் சென்று ரிப்பன் கட் செய்கிறார்.
11 மருத்துவக் கல்லூரிங்க.. 1இல்ல 2இல்ல 11 மெடிக்கல் காலேஜ், மருத்துவமனை அதையும் இவர் தான் திறந்து வைக்கிறார். அதே போல கால்நடை மருத்துவ கல்லூரி 3 திறந்திருக்கிறார். ஆசியாவில் மிகப்பெரிய கால்நடை பூங்கா தலைவாசலில் கொடுத்துள்ளோம். 1000 கோடியில் 1,040 ஏக்கரில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவின் ஒரு பகுதியை நானே திறந்து விட்டேன், மற்ற பகுதிகளை கட்டி அப்படியே காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. இதான எடப்பாடி கொண்டு வந்த திட்டம், அண்ணா திமுக கொண்டு வந்த திட்டம் என்று இன்னும் திறக்காமல் இருக்கிறார்கள், இனியாவது திறந்து வையுங்கள். ரிப்பன் கட் பண்ணுற வேலையாவது ஒழுங்காக செய்யுங்கள் என தெரிவித்தார்.