தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்,கோவை, ஈரோடு, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையில் சில பகுதிகளில் மட்டும் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அதிகபட்சமாக அவலாஞ்சி, மேல்பகாணியில் தலா 11 சென்டிமீட்டர் மழையும், பந்தலூர், சின்னக்கல்லாரில் தலா9 சென்டிமீட்டர் மழையும், சோலையாறு, தேவாலா, கூடலூரில் தல 6 சென்டிமீட்டர் மழையும், வால்பாறை, தின்கோனில் தலா 5 சென்டிமீட்டர் மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.