மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் 62 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 25 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி தனது மகன் மற்றும் பேரனுடன் டெல்லியில் உள்ள டலுபுரா என்ற பகுதியில் வசித்து வருகிறார். அவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தை முடித்து விட்டு தனது பேரனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சமையல் செய்வதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு மதுபோதையில் வந்த நபர் ஒருவர் அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 25 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மருத்துவமனையில் இருந்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலை தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் மூதாட்டியின் வீட்டில் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது முப்பது வயது இளைஞர் ஒருவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தனர். அதில் மதுபோதையில் தான் இப்படி செய்ததாக அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து மூதாட்டியின் மகனின் கூறுகையில் நான் நொய்டாவில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறேன். பணி முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது எனது தாய் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். எனது மகன் அவரது அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தான். இதையடுத்து நான் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். தாயை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்தேன். தகவலின் பெயரில் அவர்கள் குற்றவாளியை கைது செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.