கோவா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.
40 பேர் கொண்ட கோவா பேரவையில் காங்கிரஸுக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் 8 பேர் கட்சி மாறியதால் காங்கிரஸ் பலம் மூன்றாக சரிவு. ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்த இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில் கோவா காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான திகாம்பர் காமத், மைக்கேல், டிலியா, ராஜேஷ், கேதர் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்ஸியோ சிக்குரியா, ருட்டால்ப் கட்சி மாறினர்.
முன்னதாக பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் எதிர்க்கட்சி ஆட்சி நடந்து வரும் மாநிலத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி, அங்குள்ள எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழுத்து ஆட்சியை கவிழ்த்து, பாரதிய ஜனதா ஆட்சியை நிலைநாட்டி வருகிறது. இந்தியா முழுவதும் பல நிகழ்வுகள் இது போல் அரங்கேறியுள்ளனர். இதே போல தற்போது கோவா காங்கிரசை தற்போது பாஜக பதறவைத்துள்ளது.