இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தின் 90% சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் பணக்காரராக ஜொலிக்கும் எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கி வாங்கி இருந்தார். இது குறித்த அறிவிப்பு வெளியானது முதல் எலான் மஸ்கின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த விவாதங்கள் உலக அளவில் பேச்சு பொருளானது.
அவர் ட்விட்டரை வாங்கிய அடுத்த நிமிடமே அங்கிருக்கும் நிர்வாக அதிகாரங்களையும் ஊழியர்களையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்து கொண்டிருந்தார். தற்போது 90% ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.