Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல.. 2இல்ல… 500திட்டம் இரத்து… குண்டை தூக்கிப்போட்ட எடப்பாடி… கடும் ஷாக்கில் ஆளும் கட்சி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஆட்சி காலத்தில் கோவை மாநகராட்சி, கோவை மாவட்டத்திற்கு நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. விடியா திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டுவந்த திட்டத்தை முடக்குவது, ரத்து செய்வது என இந்த 15 கால மாதத்திலே நடைபெற்று வருகின்றன. அதில் சிலவற்றை குறிப்பிட விரும்புகின்றேன்.

கோவை மாநகராட்சியில் சுமார் 500 பணிகள் மாண்புமிகு அம்மாவுடைய அரசு எடுத்துக் கொண்டு, 150 கோடியில் அந்த பணிகள் செயல்படுத்துகின்ற சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திரு ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு, அந்தத் திட்டத்தை ரத்து செய்து விட்டார்கள். ஒரு திட்டமல்ல, இரண்டு திட்டம் இல்லை 500 திட்டங்கள் 150 கோடி ரூபாயில் கோவை மாநகராட்சியில் இருக்கின்ற பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக போடப்பட்ட திட்டத்தை ரத்து செய்த அரசாங்கம் விடியா திமுக அரசாங்கம்.

அதேபோல திராவிட முன்னேற்றக் கழக அரசு 133 பணிகள் எடுத்துக் கொண்டார்கள் 44 கோடியில்… அதற்கு 18 சதவீதம் கமிஷன் கேட்ட காரணத்தினால் எந்த ஒப்பந்ததாரரும் ஒப்பந்தம் எடுக்க முன்வரவில்லை. 11 முறை டெண்டர் விடப்பட்டு எந்த ஒரு ஒப்பந்ததாரரும், ஒப்பந்தம் எடுக்க முன்வரவில்லை, இது பத்திரிக்கையில் வந்த செய்திகள்.

மாண்புமிகு அம்மாவுடைய அரசு வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கு அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் 168 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு பணிகள் எல்லாம் துவங்கி சுமார் 50 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. அந்தத் திட்டத்தையும் இன்றைக்கு கைவிட இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |