Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல.. 2இல்ல.. 17மாவட்டங்களில்…. சூறாவளி காற்று, கனமழை இருக்கு… மக்களே உஷாரா இருங்க… வானிலை முக்கிய அலெர்ட் …!!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வரக்கூடிய நிலையில், வானிலை ஆய்வு மையம், இன்றைய தினம் மற்றும் நாளைய தினம் மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழக மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சியின் காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல நாளைய தினமும் தமிழ்நாடு மற்றும் புதுவை ஒட்டி இருக்கக்கூடிய அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாளை மறுதினம் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுதினம் மழை பெய்ததற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான  மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வர இருக்கும் என்றும்,  குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் அளவு வரை இருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது. அதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 20 சென்டிமீட்டர் மலையானது பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதே போல பல்வேறு மாவட்டங்களிலும் மலைப்பொழிவு என்பது பதிவாகி இருக்கின்றது. தொடர்ந்து மீனவர்களுக்கான எச்சரிக்கையையும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

குமரி பகுதியில் மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும்,  இடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அடுத்தடுத்த சில நாட்களுக்கு இதுபோன்ற அந்த காற்றின் வேகம் மாறுபடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Categories

Tech |