தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. தமிழக்த்திலும், புதுச்சேரியிலும் வரும் 19ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் சூறைக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
Categories