ஒன் ப்ளஸ் நோர்ட் மொபைலை பரிசாக பெறுவதற்கான வழிமுறையை நிறுவனத்தின் CEO தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
செல்போனில் பிராண்டட் செல்போன் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஆப்பிள் ஐபோன் ரகங்கள்தான். தற்போது அவற்றை மிஞ்சும் விதமாக ஒன் பிளஸ் மாடல்கள் களம் இறங்கியுள்ளது. உலக அளவில் அதிக நபர்கள் உபயோகிக்கக்கூடிய பிராண்டட் மொபைல்களாக ஆப்பிள் ஐபோன் இருப்பது போல், தற்போது ஒன் பிளஸ் மாறி வருகிறது. ஆப்பிள் ஐபோன்களை போலவே ஒன் பிளஸ் போன்களின் விலையையும் அதிகமாக இருப்பதால், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களால் அதை எளிதாக வாங்க முடிவதில்லை.
இதன் காரணமாக அவர்களுக்காகவே தற்போது ஒன் பிளஸ் என்ற புதிய ரக மொபைலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன் ப்ளஸ் நோர்ட் என்ற இந்த ரகம் ஜூலை 21-ஆம் தேதி லான்ச் ஆக இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து அவ்வப்போது அந்நிறுவனத்தின் சமூகவலைதள பக்கத்திலும், நிறுவனத்தின் ceo கார்ல் பெய் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் ஒன் பிளஸ் நோர்ட் குறித்து அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் பதிவிடும் பதிவுகளின் கீழ் ஒன் பிளஸ் இன் ரசிகர் ஒருவர் சிறந்த மீம்களை ஒன் பிளஸ் நோர்ட்க்காக தயார் செய்பவர்களுக்கு இந்த மொபைலை பரிசாக தருவீர்களா? என்று விளையாட்டாக கேட்ட கேள்விக்கு, பதிலளித்த அவர், கண்டிப்பாக இந்த விளையாட்டை நடத்தலாம் அனைவரும் கலந்து கொள்ளுங்கள். ஒன் ப்ளஸ் நோர்ட்க்காக சிறந்த மீமை தயாரிப்பவருக்கு இந்த மொபைல் பரிசாக வழங்கப்படும் என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பதிவின் கீழே பலர் தங்களது மீம்ஸ்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
https://twitter.com/getpeid/status/1281246650866909185