Categories
உலக செய்திகள்

சொகுசாக வாழ நினைத்த இளைஞன்…. 35 பெண்களுடன் டேட்டிங்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

டேட்டிங் என்ற பெயரில் 35 பெண்களை ஏமாற்றிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் நாட்டில் kansai மாகாணத்தின் takashi miyagawa என்ற நபர் 35 பெண்களுடன் பழகி அவர்களுடன் டேட்டிங் வாழ்க்கையே வாழ்ந்து ஏமாற்றியுள்ளார். மேலும் இவர் ஒவ்வொரு பெண்ணிடமும் தனது பிறந்தநாளை ஒவ்வொரு நாளாக குறிப்பிட்டு அவர்களுடன் டேட்டிங் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை அறிந்த அந்தப் பெண்கள் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் அந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி ஒவ்வொரு பெண்ணையும் காதலித்து ஏமாற்றி அவர்கள் மூலம் சுமார் 665 டாலர் மதிப்புள்ள பணம், உடைகள், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை பெற்றுள்ளார். இவர் ஏமாற்றியதாக தற்போது 35 பெண்கள் மட்டுமே போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதற்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர் என்று உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |