Categories
மாநில செய்திகள்

1 ரூபாய்க்கு தங்கமா….? வாங்குவது எப்படி….? உண்மை விளக்கத்துடன் முழு விவரம் இதோ….!!

தீபாவளி பண்டிகை வரவிருக்கிறது. எப்போதும் மக்கள் தீபாவளி பண்டிகையின்போது தங்கம் வாங்குவது நல்ல லாபத்தை தருமென்று தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஏராளமான வழிகள் இருக்கிறது. அதில் ஒன்று டிஜிட்டல் தங்கம். அவை அண்மைக்காலமாக ட்ரெண்டாகி வருகிறது. டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர் phonepe, G pay, Paytm மொபைல் ஆப் மூலம் டிஜிட்டல் தங்கம் வாங்கலாம்.

24 கேரட் நல்ல தங்கத்தை இந்த ஆப்புகள் மூலமாக வாங்கலாம். 1 கிராம் ஒரு சவரன் போன்ற அளவுகளில் மட்டுமில்லாமல் 1 ரூபாய்க்கு கூட தங்கம் வாங்கலாம். நாம் வாங்கும் தங்கம் இலவசமாக லாக்கரில் சேமித்து வைக்கப்பட்டு அவற்றிற்கு இன்ஷூரன்ஸ் வழங்கப்படும். நாம் சேமித்து வைத்த தங்கத்தை விற்பனை செய்யலாம். அந்தப் பணம் நேரடியாக நம்மளுடைய வங்கி கணக்கிற்கு வந்துவிடும். மேலும் நாம் தங்கத்தை நேரடியாக வாங்க வேண்டும் என்றால் டெலிவரி வசதியும் உண்டு. அவற்றை தேர்வு செய்தால் நாம் வாங்கிய தங்கம் பாதுகாப்பாக வீட்டுக்கே டெலிவரி செய்து தரப்படும்.

Categories

Tech |