இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் ஏழை மக்களுக்கு உணவளிக்க ஜன் ரசோய் என்ற உணவகத்தை திறந்து வைத்துள்ளார்.
ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் ஜன் ரசோய் என்ற உணவகத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி-யுமான கெளதம் காம்பீர் திறந்து வைத்துள்ளார். இந்த உணவகமானது கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூ அசோக் நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் ஒரே 50 பேர் சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கௌதம் காம்பீர் கூறும் போது, “நாடகம் நடத்தவோ அல்லது தர்ணா செய்யவோ நான் அரசியலுக்கு வரவில்லை எனவும், ஒரு உண்மையான மாற்றம் என்னால் நிகழ வேண்டும் என்பதற்காகத் தான் அரசியலுக்கு வந்தேன்” என கூறியுள்ளார். மேலும் சமுதாயத்தில் உள்ள ஏழை மக்களுக்கு என்னால் முடிந்த உதவியைச்கண்டிப்பாக செய்வேன் என தெரிவித்துள்ளார். அதோடு இந்த முயற்சி என்னுடன் மட்டும் முடிவடையாமல் ஒரு இயக்கமாக மாற வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.