Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அங்கிருந்து தான் வாங்கினேன்” சிக்கிய 1 டன் எடையுள்ள பொருள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக 1 டன் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த நபர் தான் பெட்டிக்கடை நடத்தி வருவதாகவும், ரங்கே கவுடர் வீதியில் இருக்கும் மொத்த விற்பனை குடோனில் இருந்து புகையிலையை வாங்கி வந்ததாகவும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அங்கு மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடோன் உரிமையாளரான வடமாநிலத்தை சேர்ந்த பூமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |