Categories
மாநில செய்திகள்

1 தண்ணீர் பாட்டில் விலை ரூ 200…… இயற்க்கை சீற்றத்தால் நேர்ந்த கதி…. பொதுமக்கள் அவதி….!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேக வெடிப்பு காரணமாக நைனிடாலில் கடந்த 24 மணிநேரத்தில் 535 மில்லிமீட்டர் மழை பெய்து ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுதான் இந்தியாவில் பெய்த மழையில் அதிகபட்சமான மழை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே அடுத்த 36 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் எச்சரிக்கை நடவடிக்கைகளில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தற்காலிமாக முகாம்கள் அமைத்து பொது மக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த மாநிலங்களில் இந்துக்களின் புனித தலமான பத்ரிநாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் யமுனோரிநாத் ஆகிய நான்கு தளங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கனமழை பெய்து வருவதால் புனித யாத்திரை செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே யாத்திரை தொடங்கிய பக்தர்களை ஆங்காங்கே தங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளங்கள் பெருகி உள்ளதால் சந்தைகள் மற்றும் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அதன் விலை அதிகரித்து வருகின்றன.அதில் தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.200 மற்றும் தக்காளி ஒரு கிலோ ரூ.150 மற்றும் சாப்பாடு ரூ.500க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக முதல்வர் புஷ்கர் சிங்கிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் நேரில் சென்று பிரதமர் மோடி பார்வையிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |