Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடல் முழுவதும் கொட்டிய பால்…. வலியில் துடித்த 1 வயது குழந்தை…. திருவள்ளூரில் நடந்த சோகம்…!!

சூடான பால் உடலில் கொட்டியதால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சங்கரணை கிராமத்தில் ரவி-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவருக்கு ஒரு வயதுடைய காசியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா தனது குழந்தைக்காக பாலை காய்ச்சியுள்ளார். அதன் பின் பாலை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துள்ளார். இதனையடுத்து யாரோ அழைத்தது போல சத்தம் கேட்டதால் சங்கீதா வாசலுக்கு சென்று பார்த்துள்ளார். இதற்கிடையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கண் விழித்து தவழ்ந்து சூடான பாலை இழுத்து விட்டது.

இதனால் உடல் முழுவதும் பால் கொட்டி குழந்தை வலியில் அலறி சத்தம் போட்டுள்ளான். அதன்பின் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சங்கீதா காசியப்பனை மீட்டு உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |