ரூ.15.5 கோடிக்காக மாஸ்டர் படத்தை அமேசான் பிரேமில் படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகர்கள் நடித்த மாஸ்டர் படம் கடந்த 13ம் தேதி வெளியானது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் மூன்றே நாட்களில் 100 கோடிக்கு வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் தற்போது 300 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் தியேட்டர் திரையரங்குகளில் வெளியான வேகத்தில் தற்போது அமேசான் பிரேமில் வந்து விட்டது. எனவே பலரும் வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றர்.
இவ்வளவு சீக்கிரத்தில் மாஸ்டர் படம் அமேசான் பிரேமில் வெளியிடப்பட்டதற்கு ஒரு காரணம் பகூறப்படுகின்றது. என்னவென்றால் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இரண்டு மாதங்கள் கழித்துதான் ஓடிடியில் வெளிவரும் என்று முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் அமேசான் நிறுவனம் கூடுதலாக 15.5 கோடி கொடுத்தால் முன்கூட்டியே ஓடிடியில் படக்குழு வெளியிட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குக்காக எடுக்கப்பட்ட படம் என்று கூறி பல மாதங்களாக காத்திருந்த நிலையில் வெறும் ரூ.15.5 கோடிக்கு அவசரப்பட்டு ஓடிடியில் வெளியிட்டுவிட்டார்களே? என்று திரையரங்க உரிமையாளர்கள் கோபத்தில் உள்ளனர் என்று கூறப்படுகின்றது.