பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் இதோடு நம்முடைய வாழ்க்கை முடிந்துவிட்டதோ? அடுத்தவர்கள் நம்மை என்ன நினைப்பர்களோ என்று எண்ணி எண்ணி மன அழுத்தத்தின் காரணமாக பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் இதன் காரணமாக தற்கொலை செய்யும் நிலைமை கூட ஆளாகிவருகின்றனர்.
இதனால் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை இழக்கும் நிலை உருமாகிறது. இவ்வாறு மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கேரளாவைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இரண்டு நாட்கள் தங்கள் குடும்பத்தினரோடு கொடைக்கானலில் இளைப்பாற தன்னுடைய இடத்தை கொடுத்து உதவுகிறார். மேலும் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தால் வாழ்க்கை முடிந்து விடாது என்றும் அவர் கூறியுள்ளார்.