Categories
தேசிய செய்திகள்

10ஆம் வகுப்பு தேர்ச்சியா?… ரிசர்வ் வங்கியில் பணி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி தனது அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு காவலர்களை வேலைக்கு தேர்ந்து எடுத்து வருகிறது.

ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் உள்ள தனது அலுவலகங்களில் பணியாற்ற காவலர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கிறது. 241 காலி பணியிடங்கள் உள்ளன. சென்னை அலுவலகத்தில் மட்டும் 22 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கான தகுதி 10-வது தேர்ச்சி. முழுமையான ராணுவ பின்புலம் கொண்ட முன்னாள் ராணுவத்தினர் மட்டும் இப்பணிக்கு தகுதியானவர்கள். வயது வரம்பு – ஜன., 1, 2021 அன்று 25 வயதாக இருக்க வேண்டும்.

இதர பிரிவினருக்கு 28, பட்டியலினத்தவர்களுக்கு 30 ஆக வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புக்கு மேல் தகுதி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியாது. அதனால் போட்டி ஓரளவு குறைவாக இருக்கும். 100 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு உண்டு. அதன் பின்பு உடல் தகுதித் தேர்வு. இப்பணிக்கு ரூ.20 ஆயிரம் வரை ஆரம்ப ஊதியம் கிடைக்கும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: பிப்ரவரி 12

Categories

Tech |