சென்னை ஆழ்வார்பேட்டையில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது..
தமிழகத்தில் கடந்த செப்.,1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது.. இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய தனியார் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. அந்த மாணவியின் பெற்றோர் பெங்களூர் சென்று வந்ததன் காரணமாக அவரின் தந்தைக்கும் தொற்று ஏற்பட்டது.. அதன் வழியாக இந்த மாணவிக்கும் தொற்று ஏற்பட்டதாக பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது.. மாணவர்கள், ஆசிரியர்கள் என சம்பந்தப்பட்ட 103 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்று மாலை தெரியவரும்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மணிஷ் பள்ளிக்கு நேரில் சென்று வரக்கூடிய பள்ளி மாணவர்களை எப்படி அமர வைக்கிறார்கள்.. என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்கிறார்கள்.. ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறதா, முக கவசம் அணிந்து பள்ளிக்கு வருகிறார்களா என்று ஆய்வு மேற்கொண்டார்.. இதற்கிடையே கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக ஒரு வார காலத்திற்கு பள்ளி மூடப்பட்டுள்ளது.