தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டம் ஏதும் இல்லை என்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முகஸ்டாலின் , நிதியமைச்சர் தாக்கல் செய்த பத்தாவது பட்ஜெட் பத்தாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது.
இந்த ஆட்சியில் நிதிநிலை அறிக்கை பொருத்தவரையில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நிதி பற்றாக்குறை , வருவாய் பற்றாக்குறை , கடன்சுமை இதுதான் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.
கடன் சுமையை பொருத்தவரைக்கும் 4 இலட்சத்து 56 ஆயிரம் கோடி என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது ஒவ்வொரு மனிதனின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் சுமத்தப்படுகிறது.
திராவிட முன்னேற்ற கழகம் 2011ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த காலத்தில் கடன் என்பது ஒரு லட்சம் கோடி தான் . அதிமுக ஆட்சி வந்ததற்குப் பிறகு இந்த பத்து ஆண்டில் மூன்று மடங்கு உயர்ந்து 4 லட்சம் கோடியாக இருக்கின்றது என்று நிதிநிலை அறிக்கை காட்டுகின்றது.
பணியாளர்கள் தேர்வாணை , தலைமைச் செயலகம் முதல் கிராம நிர்வாகம் வரை கடனில் தான் மூழ்கி இருக்கிறது. கடனில் மட்டுமல்ல மோசடியில் , இலஞ்சம் ஊழல் செய்வதில் இந்த அரசு முழுமையாக மூழ்கி இருக்கிறது. இதில் எந்த தொலைநோக்குத் திட்டமோ , வளர்ச்சி திட்டமும் கிடையாது என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.