கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா என்பவரின் மகள் தரணி, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்பு முடிந்தவுடன் அதே பகுதியில் தட்டச்சு பயிற்சிக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய மாணவி தரணி, அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கூலி வேலைக்கு சென்ற பெற்றோர் மதியம் வீடு திரும்பிய போது மகள் தரணி தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தூக்கு போடுவதற்கு முன் கத்தியால் கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததும் தெரியவந்தது.