வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று 10வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் ஆதரவு பெருகியுள்ளது.
இதனையடுத்து டெல்லியில் 10வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அடிப்படை ஆதார விலை தொடர்பான நடவடிக்கை மட்டுமின்றி வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உறுதியாக உள்ளனர். மேலும் விவசாயிகளுடன் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சின் தோமர் தலைமையில் மத்திய அரசு என்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.