Categories
வேலைவாய்ப்பு

10வது வகுப்பு தேர்ச்சி போதும்…. இந்திய அஞ்சல்துறையில் வேலை…. உடனே விண்ணப்பிங்க….!!!

அஞ்சல் துறையில் 17 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 10, 2022. இதுபற்றிய விளம்பரம் www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளிவந்துள்ளது.

இந்தியா அஞ்சல்துறை ஆட்சேர்ப்பு 2022:

பதவி: ஸ்டாஃப் கார் டிரைவர் (சாதாரண தரம்)

ஊதிய அளவு: நிலை-2

வயது வரம்பு: 56 ஆண்டுகள்

காலியிடங்களின் எண்ணிக்கை:

அஞ்சல் மோட்டார் சர்வீஸ் கோயம்புத்தூர்: 11

ஈரோடு பிரிவு 02

நீலகிரி பிரிவு: 01

சேலம் மேற்கு பிரிவு: 02

திருப்பூர் பிரிவு: 01

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் மூன்று வருட அனுபவத்துடன் இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனத்திற்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனுபவம் மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி

இந்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழியில் ஏற்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது, சாதி, தகுதி, அனுபவம், ஓட்டுநர் உரிமம் போன்ற சான்றுகளின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன்,

மேலாளர்
அஞ்சல் மோட்டார் சேவை
குட்ஸ் ஷெட் சாலைகள்
கோயம்புத்தூர்- 641001
என்ற முகவரிக்கு நிரப்பபட்ட விண்ணப்பங்களை அஞ்சல் வாயிலாக அனுப்பலாம்.

விண்ணப்பதாரர்கள் www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |