Categories
உலக செய்திகள்

10வயசு சிறுவனுக்கு நேர்ந்த துயரம்… 5 நாட்களுக்கு பின் உயிரிழப்பு… வெளியாகிய புகைப்படம் …!!

10 வயது சிறுவன் ஒருவர் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனிலுள்ள Birmingam நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் 10 வயது சிறுவன் ஒருவன் தலையில் பலமாக  அடிபட்டு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் காயமடைந்த 5 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக வெஸ்ட் மிட்லந்த்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுவர் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது எப்படி நடந்தது? எதனால் அடி பட்டது? என்பது குறித்த தகவல் தெரியவில்லை.

இருப்பினும் பள்ளியின் தலைமையாசிரியர் இச்சம்பவம் குறித்து கூறுகையில், “உயிரிழந்த சிறுவன் Yasir Hassain அனைவருக்கும் பிடித்த மாணவர். மேலும் அவர் ஆசிரியர்களுக்கு  நம்பிக்கையான பையன்.

அவர் படிப்பில் வெற்றி பெறுவதில் உறுதியாக இருந்தார்.  இப்படிப்பட்ட நல்ல ஒரு பையனை இழந்துள்ளது அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எங்களின் எண்ணம் முழுவதுமே சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மேல் தான் உள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் எங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று நாங்கள் மிகுந்த மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் மாணவரின் இழப்பை சமாளிக்க அவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்”என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் பள்ளியின் ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |